ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்கு
குடிநீர் குழாய் அமைக்கும் பணியால் ஏற்பட்ட தகராறில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நெல்லிக்குப்பம்,
கடலூர் பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சி வார்டு உறுப்பினராக மலர்விழி என்பவர் இருந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று, அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வீட்டின் முன்பு சாலையில் பள்ளம் தோண்டி குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ராஜேந்திரன், எதற்காக இங்கு பள்ளம் தோண்டுகிறீர்கள்? என கேட்டுள்ளார். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் மலர்விழி, அவரது கணவர் மஞ்சினி, ராஜேந்திரன் ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து ராஜேந்திரன், மஞ்சினி ஆகியோர் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன் பேரில் ராஜேந்திரன், மஞ்சினி, மலர்விழி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.