த.மு.மு.க.வினர் 300 பேர் மீது வழக்கு
த.மு.மு.க.வினர் 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி
திருச்சி:
முகமதுநபியை அவதூறாக பேசிய பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் செய்தி தொடர்பாளர்கள் நுபுர்சர்மா, நவீன் ஜின்டால் ஆகியோரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி த.மு.மு.க. சார்பில் திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானா அருகே நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தநிலையில் சட்டவிரோதமாக கூட்டம் சேர்த்ததாகவும், பொது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகவும், த.மு.மு.க. மாவட்ட தலைவர் முகமதுராஜா உள்பட 300 பேர் மீது காந்திமார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story