விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 300 பேர் மீது வழக்கு


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 300 பேர் மீது வழக்கு
x

அனுமதியின்றி ஊர்வலம் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 300 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வேலூர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மக்கான் சிக்னலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்து ராணி மகால் வரை போலீசாரின் அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக ஊர்வலமாக சென்றனர்.

இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நீல. சந்திரகுமார், கோட்டி என்ற கோவேந்தன் உள்பட 300 பேர் மீது வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story