பட்டாசு வெடித்த 4 பேர் மீது வழக்கு
பட்டாசு வெடித்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதற்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதை மீறி பட்டாசு வெடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் வடமதுரை, எரியோடு, வேடசந்தூர், குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்து போலீசாரிடம் சிக்கி கொண்டனர். இதையடுத்து அந்த 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story