தொளசம்பட்டி அருகேநிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


தொளசம்பட்டி அருகேநிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 1:20 PM IST)
t-max-icont-min-icon

தொளசம்பட்டி அருகேநிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சேலம்

ஓமலூர்

ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி மானத்தாள் ஓலைப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 70). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர்களான குமார் (43) குடும்பத்தினருக்கும் இடையே வழித்தடம் குறித்து முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று கோவிந்தனின் மூத்த மகன் அந்த சர்சைக்குரிய வழியாக சென்றபோது குமார், அவரது சகோதரர்கள் ராஜேந்திரன், வல்லமுத்து, தாயார் செல்வி ஆகிய 4 பேரும் சேர்ந்து கோவிந்தனின் மகனை தாக்கினர்.

இதனை பார்த்த கோவிந்தன் சம்பவ இடத்திற்கு சென்று தட்டி கேட்டுள்ளார். அப்போது கோவிந்தனையும் 4 பேர் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கோவிந்தன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் தொளசம்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் குமார், ராஜேந்திரன், வல்லமுத்து, செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story