பா.ஜனதா நிர்வாகிகள் உள்பட 5 பேர் மீது வழக்கு
பா.ஜனதா நிர்வாகிகள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நேற்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இவ்விழாவிற்கான பாஸ் வழங்க கோரி பா.ஜனதாவைசேர்ந்தவர்கள் கோவிலில் பணியாற்றும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த காவலாளி சுதர்சனம் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் மாரிமுத்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பா.ஜனதாவை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story