கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு


கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x

நிலக்கோட்டை அருகே, பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அவருடைய மனைவி கார்த்திகை ராணி (வயது 30). இந்த தம்பதிக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கார்த்திகை ராணி மனுதாக்கல் செய்தார்.

அதில் தனது கணவர் ரவிச்சந்திரன், மாமனார் ஆவளி, மாமியார் காமாட்சி, உறவினர்கள் அழகுமலை, மலர்செல்வி ஆகியோர் தன்னிடம் 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில் புகார் கூறப்பட்ட ரவிச்சந்திரன் உள்பட 5 பேர் மீது, போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story