வாலிபரை தாக்கிய பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது


வாலிபரை தாக்கிய பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
x

வாலிபரை தாக்கிய பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியகருகை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேல்(வயது 25). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், இவரது மாமா கவர்னர் என்பவரும் கிடா வெட்டு விருந்துக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த வீரமணி என்பவர் ஜெயவேலுவின் தாய்மாமாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தட்டிக்கேட்ட ஜெயவேலுவை வீரமணி மற்றும் அவரது தந்தை பஞ்சநாதன், தங்கமணி, மகேஸ்வரி, சித்ரா ஆகியோர் சேர்ந்து திட்டி, பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஜெயவேலுவை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஜெயவேலு கொடுத்த புகாரின்பேரில் வீரமணி, பஞ்சநாதன், தங்கமணி, மகேஸ்வரி, சித்ரா ஆகியோர் மீது ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிந்து வீரமணியை (28) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story