வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 5 பேர் மீது வழக்கு


வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 5 பேர் மீது வழக்கு
x

சீர்வரிசை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்த 5 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள அணைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே காசாங்கோட்டை கிராமத்தில் உள்ள தனது அக்காள் மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சீர்வரிசை எடுத்துக்கொண்டு உறவினர்களுடன் வெடி வெடித்து மேளதாளங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வல்லவன் (வயது 41), ரவி (43), சுமதி (43), அருண் (30), ராஜதுரை (31) ஆகியோர் எங்கள் வீதி வழியாக சீர்வரிசை எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில் வல்லவன் உள்ளிட்ட 5 பேர் மீது விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story