கோத்தகிரியில் காரில் மதுபாட்டில்கள் கொண்டு வந்த 5 பேர் மீது வழக்கு


கோத்தகிரியில் காரில் மதுபாட்டில்கள் கொண்டு வந்த 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் காரில் மதுபாட்டில்கள் கொண்டு வந்த 5 பேர் மீது வழக்கு

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர் கோத்தகிரி வழியாகவே ஊட்டிக்கு செல்கின்றனர். அவ்வாறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை குஞ்சப்பனை சோதனை சாவடியில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடி, வழியாக வரும் வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது காருக்குள் வெளிநாட்டு மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

போலீசாரின் விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 24) என்பதும் காரில் அவருடன் வந்த 4 பேர் ஸ்ரீதரின் நண்பர்கள் என்பதும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story