போக்குவரத்து விதிமுறைகள் மீறியதாக 50 பேர் மீது வழக்கு


போக்குவரத்து விதிமுறைகள் மீறியதாக 50 பேர் மீது வழக்கு
x

ஜோலார்பேட்டை பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் மீறியதாக 50 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், அதிவேகம், ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் அமர்ந்து செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை கடைபிடிக்காமல் சென்ற வாகன ஓட்டிகள் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து வாகன ஓட்டிகளிடம் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். மோட்டார்சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டும் போன்ற விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்தினர்.


Next Story