கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 50 பேர் மீது வழக்கு- ரூ.52 ஆயிரம் அபராதம் வசூல்


கோத்தகிரியில்  போக்குவரத்து விதிகளை மீறிய 50 பேர் மீது வழக்கு- ரூ.52 ஆயிரம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

சோதனை

தமிழகத்தில் விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கட்டாயமாக பின்பற்றும் வகையிலும் நடவடிக்கை எடுப்பதற்காக போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபாராதத்தொகை கடந்த சில மாதங்களுக்கு முன் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

இந்தநிலையில் நேற்று கோத்தகிரி ரோந்துப் பணி சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் நேற்று போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோத்தகிரி டானிங்டன் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்கியவர்கள், இருசக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், தலைக் கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றவர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி சென்ற வாகன ஓட்டிகள் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யபட்டு அவர்களுக்கு 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

50 பேர் மீது வழக்கு

இதேபோல கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையில் இன்சூரன்ஸ் இல்லாதவர்கள், ஆட்களை வாகனங்களில் ஏறிச் சென்றவர்கள், சீட் பெல்ட் மற்றும் தலைகவசம் அணியாதவர்கள், கார்களில் கூலிங் ஸ்டிக்கர்கள் அகற்றாத வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறிய 34 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு 36 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். நேற்று ஒரு நாளில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய மொத்தம் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யபட்டு 52 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் போலீசார், போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், அபராதத்தை தவிர்க்க வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனக் கூறி விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.


Next Story