வட்டி பணம் கேட்டு சென்றவர்களை தாக்கிய 7 பேர் மீது வழக்கு


வட்டி பணம் கேட்டு சென்றவர்களை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
x

ஜெயங்கொண்டம் அருகேவட்டி பணம் கேட்டு சென்றவர்களை தாக்கிய 7 பேர் மீது வழக்கு

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி அஞ்சலை. இவரது மருமகள் சங்கீதா வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். இந்தநிலையில் வட்டி பணம் கேட்டு சென்ற சங்கீதா, அவரது கணவர் அன்பழகன், மாமியார் அஞ்சலை ஆகியோரை அதே பகுதியை சேர்ந்த ராஜ் மற்றும் உறவினர்கள் 6 பேர் சேர்ந்து தாக்கினர். இதில் படுகாயமடைந்த அஞ்சலை, அன்பழகன் ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அஞ்சலை தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ராஜ் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story