சேவல் சண்டை நடத்திய 8 பேர் மீது வழக்கு
சேவல் சண்டை நடத்திய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி
காட்டுப்புத்தூர் அருகே மாராச்சிபட்டி கிராமம், சீத்தகாடு பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தப்படுவதாக காட்டுப்புத்தூர் போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய குண்டுமணி பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் (வயது 25), வலையப்பட்டி கணேசன் (28), செல்லதுரை (28), ஏலூர் பட்டி ஜீவா (21), வசந்த் (21), புலியூர் சக்திவேல் (21), நாமக்கல் மாவட்டம் கோனானூரை சேர்ந்த மணிகண்டன் (25) மற்றும் 18 வயது சிறுவன் உள்பட 8 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்து சேவல்கள் மற்றும் ரூ.1,100-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story