புகையிலை பொருட்கள் விற்ற 9 பேர் மீது வழக்கு
வேதாரண்யம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்,:
வேதாரண்யம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் செம்போடை, தேத்தாக்குடி, அகஸ்தியன்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக செம்போடை, அகஸ்தியன்பள்ளி, தேத்தாக்குடி பகுதிகளை சேர்ந்த கருணாநிதி (வயது 60), நடராஜன் (50), ராஜசேகர் (40), ரமணி (47), நடராஜன் (60), வைத்திநாதன் (40), மாசிலாமணி (54), புகழேந்தி (49), பத்மநாதன் (50) ஆகிய 9 பேர் மீது வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story