லைவ்:அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் - ஓபிஎஸ் தரப்பு வாதம்


x
தினத்தந்தி 22 March 2023 10:39 AM IST (Updated: 22 March 2023 5:27 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக பொதுச்செயலாளர், தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இந்த வழக்கின் பரபரப்பு வாதங்கள் தற்போது நடைபெற்று வருகீறது.


Live Updates

  • 22 March 2023 12:01 PM IST

    எம்.ஜி.ஆரின் நோக்கத்துக்கு விரோதமானது - ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதம்

    பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவுகள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நோக்கத்துக்கு விரோதமானது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

    1977 முதல் கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளார்.

    ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கினர். இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை.

    அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் தரப்பில் பரபரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

  • 22 March 2023 11:30 AM IST

    "ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் அறிவிக்கவில்லை" - ஓபிஎஸ் தரப்பு வாதம்

    ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் அறிவிக்கவில்லை. தகுதிநீக்கம் செய்துவிட்டு பதவிகள் காலாவதியாகிவிட்டதாகக் கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. ஜூலை 11-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது - ஓபிஎஸ் தரப்பு வாதம்

  • 22 March 2023 11:09 AM IST

    கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும் - ஓபிஎஸ் தரப்பு வாதம்

    ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ம் ஆண்டு வரை நீடிக்கிறது. விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும்; அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது.

    கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும். அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய தீர்மானத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது.

  • 22 March 2023 11:08 AM IST

    ஓ.பன்னீர் செல்வம் நீக்கம் தன்னிச்சையானது, நியாயமற்றது.

    பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் முதல்வராக, நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளார்.

    ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது. எந்த வாய்ப்பும் அளிக்காமல் எந்த காரணமும் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர், இது தன்னிச்சையானது, நியாயமற்றது.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது.


  • 22 March 2023 10:46 AM IST

    பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த நிலையில் அந்த பதவிக்கு போட்டியிட விதிகள் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன-  ஓபிஎஸ் தரப்பு

  • 22 March 2023 10:45 AM IST

    எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் இல்லாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது தன்னிச்சையானது, நியாயமற்றது- ஓபிஎஸ் தரப்பு வாதம்

1 More update

Next Story