கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய அண்ணன்-தம்பி மீது வழக்கு


கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய அண்ணன்-தம்பி மீது வழக்கு
x

கடையநல்லூர் அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய அண்ணன்-தம்பி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே கம்பனேரி புதுக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் தலையாரி ரமேஷ் ஆகியோர் கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி பன்னீர்பேரி குளம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை பார்க்க சென்றனர். அப்போது விவசாயிகளான மேல கடையநல்லூர் கிருஷ்ணன் கோவில் கீழத்தெருவை சேர்ந்த மோசஸ் மகன்கள் பிரான்சிஸ் (வயது 35), ஆல்பர்ட் (45) ஆகியோர் வேத நாராயணப்பேரி மற்றும் அலவந்தன் குளம் ஆகியவற்றுக்கு செல்லும் நீர் ஓடையை ஆக்கிரமிப்பு செய்திருப்பதை தட்டிக் கேட்டனர். இதனால் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி ஆகிய இருவரும் சேர்ந்து தங்களை தாக்கியதாக கடையநல்லூரில் போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story