நிறுவன நிர்வாகிகள் மீது வழக்கு


நிறுவன நிர்வாகிகள் மீது வழக்கு
x

அதிக தொகை தருவதாக மோசடி செய்ததாக நிறுவன நிர்வாகிகள் மீது வழக்கு

திருநெல்வேலி

நெல்லை ராமசுதர்சன், தென்காசி சந்திரன், சென்னை வின்சென்ட் மோகன்தாஸ் என்ற ஜெயக்குமார், பொள்ளாச்சி கவிதா ஆகியோரை இயக்குனர்களாக பதிவு செய்து, நெல்லையில் ஒரு நிறுவனத்தினை ஆரம்பித்தனர் அந்த நிறுவனத்தில் மாதந்தோறும் 500 ரூபாய் முதலீடு செய்தால் 63 மாதங்களில் 45 ஆயிரம் மற்றும் நிரந்தர வைப்புத்தொகை, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் கிடைக்கும். மேலும் 36 மாதங்களில் முதிர்வின்போது ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் கிடைக்கும் என்று கூறியதன் பேரில் பலர் இதில் முதலீடு செய்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த யோகராஜ் என்பவர் முதலீடு செய்த தொகையில் ரூ.83 ஆயிரத்தை கொடுக்காமல் அந்த நிறுவனத்தினர் மோசடி செய்ததாக, அவர் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த நிறுவனத்தில் பண முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள், நெல்லை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யலாம் என்று இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story