மூதாட்டியை தாக்கிய மருமகள் மீது வழக்கு
மூதாட்டியை தாக்கிய மருமகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
அரிமளம் அருகே உள்ள கல்லூர் மணிக்கட்டி வீதியை சேர்ந்தவர் ராமாயி (வயது 80). இவரது மகன் ராஜ்குமாருக்கும், சரண்யா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த 1½ ஆண்டுகளாக ராஜ்குமார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால் சரண்யா தனது மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரண்யா தனது மாமியார் ராமாயியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் கே.புதுப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ராமாயி அளித்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீசார் சரண்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story