பெண்ணை தாக்கிய தந்தை-மகன்கள் மீது வழக்கு


பெண்ணை தாக்கிய தந்தை-மகன்கள் மீது வழக்கு
x

பெண்ணை தாக்கிய தந்தை-மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அர்த்தநேரி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி இந்திராணி(வயது 55). இவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும் மதியழகன் இறந்துவிட்டதால், இந்திராணி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இந்திராணிக்கு ஏற்கனவே பிரித்துக் கொடுக்கப்பட்ட சொத்துக்களை, அவரது கொழுந்தனாரான ஜெயராமன்(61) என்பவர் தனக்கும், தனது வாரிசுகளுக்கும் எழுதி தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று திடீரென ஏரிக்கரை அருகில் இந்திராணியை ஜெயராமன், அவரது மகன்கள் செந்தில்குமார்(48), சரவணன்(44) ஆகியோர் வழிமறித்து சொத்து தொடர்பாக பிரச்சினை செய்து தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திராணி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story