கேரள லாரிகளை சிறைபிடித்த பார்வர்டு பிளாக் கட்சியினர் மீது வழக்கு


கேரள லாரிகளை சிறைபிடித்த பார்வர்டு பிளாக் கட்சியினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Aug 2023 2:30 AM IST (Updated: 8 Aug 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

கேரள லாரிகளை சிறைபிடித்த பார்வர்டு பிளாக் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி

கம்பத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு கூலித்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ஜீப் டிரைவர் சதீஷ்குமார் கடந்த 5-ந்தேதி கம்பம்மெட்டு அருகில் கேரளாவை சேர்ந்த சிலரால் தாக்கப்பட்டார். அந்த சம்பவத்தை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர், தேனி பங்களாமேட்டு பகுதியில் கேரளாவுக்கு கனிம வளங்கள் ஏற்றிச்சென்ற 4 லாரிகளை நேற்று முன்தினம் இரவு சிறை பிடித்தனர். அப்போது கம்பம் ஜீப் டிரைவர் தாக்கப்பட்ட வீடியோவை, லாரி டிரைவர்களிடம் காட்டி கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும், அந்த லாரிகளில் விதிகளை மீறி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த லாரிகள் தேனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் லாரிகள் விடுவிக்கப்பட்டன. லாரி சிறைபிடிக்கப்பட்டது தொடர்பாக இடுக்கி மாவட்டம், நெடுங்கண்டம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் முகுசின் (35) கொடுத்த புகாரின் பேரில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி மற்றும் அக்கட்சியை சேர்ந்த பலர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story