பா.ஜனதா வக்கீல்கள் மீது வழக்கு
கலெக்டர் பங்களா முன் போராட்டம் நடத்தியது தொடர்பாக பா.ஜனதா வக்கீல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி
தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் உமரோ என்ற பிரசாந்த் குமார் உமரோ என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்குவதற்காக சான்று கேட்டபோது, பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் சீல் வைக்காமல் கொடுத்து விட்டார்களாம்.
இதையடுத்து பா.ஜனதாவைச் சேர்ந்த வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி மற்றும் வக்கீல்கள் இரவில் கலெக்டர் பங்களா முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஐகிரவுண்டு போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுதொடர்பாக வி.எம்.சத்திரம் கிராம நிர்வாக அலுவலர் பாக்கியமணி கொடுத்த புகாரின்பேரில், வெங்கடாஜலபதி என்ற குட்டி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story