ரூ.4½ லட்சத்தை மோசடி செய்தவர் மீது வழக்கு


ரூ.4½ லட்சத்தை மோசடி செய்தவர் மீது வழக்கு
x

ரூ.4½ லட்சத்தை மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள ஆனைக்குட்டத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 54). இவர் தனது மகள் திருமண செலவுக்காக தான் வளர்த்து வந்த 120 ஆடுகளை சிவகாசி அருகே உள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்த ராமர் என்பவருக்கு ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்திற்கு விற்பனை செய்தார். ராமர் இரண்டு தவணைகளாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை மட்டும் கொடுத்து விட்டு மீதி ரூ.4½ லட்சத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி குருசாமி கொடுத்த புகாரின் பேரில் ராமர் மீது ஆமத்தூர் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story