கோா்ட்டு விசாரணையை செல்போனில் பதிவு செய்தவர் மீது வழக்கு


கோா்ட்டு விசாரணையை செல்போனில் பதிவு செய்தவர் மீது வழக்கு
x

கோா்ட்டு விசாரணையை செல்போனில் பதிவு செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

கோவில்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 55). இவரது குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது கோர்ட்டு நடவடிக்கைகளையும், விசாரணைகளையும் அவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து கோர்ட்டு ஊழியர் சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் கனகராஜ் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story