மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு
மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் கோடாலிகருப்பூர் கொள்ளிடக்கரை ஏழு கண் வாய்க்கால் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கோடாலிகருப்பூர் காலனி தெருவை சேர்ந்த சாம்பசிவம் என்பவர் தனது மொபட்டில் 3 மணல் மூட்டைகளை ஏற்றி சென்றுள்ளார். கிராம நிர்வாக அலுவலரை கண்டதும் மணல் மூட்டைகள் மற்றும் மொபட்டை அங்கேயே விட்டுவிட்டு சாம்பசிவம் தப்பி சென்று விட்டார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் மொபட் மற்றும் மணல் மூட்டைகளை தா.பழூர் போலீசில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாம்பசிவத்தை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story