கள் விற்பனை செய்தவர் மீது வழக்கு


கள் விற்பனை செய்தவர் மீது வழக்கு
x

கள் விற்பனை செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர்

நச்சலூர் அருகே உள்ள ஓந்தாம்பட்டியில் சட்டவிரோதமாககள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில் குளித்தலை போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓந்தாம்பட்டியில் சிதம்பரம் என்பவரின் தோட்டத்தில் கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கள் விற்பனை செய்ததாக தென்காசி மாவட்டம் கரைகண்டார் குளம் அம்மன்கோவில ்தெருவை சேர்ந்த ராஜா (வயது 34) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2½ லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story