புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு


புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு
x

புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர்

வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நொய்யல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக நொய்யல் பகுதியை சேர்ந்த சந்தானகுமார் (வயது 30) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கிருந்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story