ஷாருக்கானுக்கு எதிரான வழக்கு - மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு
ஷாருக்கானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த குஜராத் கோர்ட்டின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது
புதுடெல்லி,
ஷாருக்கானுக்கு எதிரான கிரிமினல் வழக்கை ரத்து செய்த குஜராத் கோர்ட்டின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீதான வதோதரா நெரிசல் குறித்த தொடரப்பட்ட வழக்கில், குஜராத் கோர்ட்டு ரத்து செய்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதிப்படுத்தியுள்ளது. குஜராத் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது, இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு , நடிகர் ஷாருக்கானுக்கு எதிரான மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.
Related Tags :
Next Story