தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு


தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 March 2023 11:21 PM IST (Updated: 16 March 2023 3:47 PM IST)
t-max-icont-min-icon

தந்தையை தாக்கிய மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கடம்பூர் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 79). இவரது மகன் முருகேசன்(44). சம்பவத்தன்று கலியபெருமாள் தனது மகனான முருகேசன் வீடு கட்டும்போது, தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் கடனாக வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கலியபெருமாள் முருகேசனிடம் வாங்கிகொடுத்த பணத்தை திருப்பி தரும்படி பலமுறை கேட்டுள்ளார். முருகேசன் பணம் கொடுக்காததால் தான் குடியிருந்த வீட்டை விற்பதற்கு முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த முருகேசன் கலியபெருமாள் வீட்டில் தனியாக இருந்தபோது ஏன் வீட்டை விற்கிறாய்? என்று கேட்டு அவரை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கலியபெருமாள் அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் கலியபெருமாள் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலரழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story