கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் மீது வழக்கு


கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் மீது வழக்கு
x

கோத்தகிரி அருகே கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள குண்டாடாவை சேர்ந்த மகேந்திரன் (வயது 28) என்பவர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனு கூறப்பட்டுள்ளதாவது:-

நான் குடும்ப செலவிற்காக கெரடா பகுதியை சேர்ந்த ஜெயராம் (46) என்பவரிடம் கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியிருந்தேன். அவர் அதற்கான வட்டி என ரூ.1,400-யை முன்கூட்டியே பிடித்தம் செய்து மீதித் தொகையான ரூ.3 ஆயிரத்து 600-யை மட்டுமே கொடுத்தார். மேலும் வாரம் ரூ.500 வீதம் 10 வாரத்தில் ரூ.5 ஆயிரத்தை கட்ட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் என்னிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதுடன், 23 காசோலைகளையும் பெற்றுக்கொண்டார். கொரோனா பேரிடர் காலம் என்பதால் என்னை அந்த தொகையை சரிவர செலுத்தமுடியவில்லை. இப்போது அவர் வட்டியுடன் அசலையும் கட்ட வேண்டும் என்று என்னை மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story