முன்விரோத தகராறில்விவசாயியின் விரலை கடித்து குதறியவர் மீது வழக்கு
முன்விரோத தகராறில் விவசாயியின் விரலை கடித்து குதறியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மங்கலம்பேட்டை,
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எடச்சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் வெங்கடேசன் (வயது 53). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சிங்கு மகன் வெங்கடேசன். சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், சிங்கு மகன் வெங்கடேசன், அவரது மனைவி ஜோதி, தாய் சம்பூர்ணம் ஆகியோர் சேர்ந்து கொண்டு பெருமாள் மகன் வெங்கடேசன் வீட்டிற்கு முன்பு வந்து அவரை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் பெருமாள் மகன் வெங்கடேசனின் மோதிர விரலை பல்லால் கடித்து குதறியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் சிங்கு மகன் வெங்கடேசன், அவரது மனைவி ஜோதி, தாய் சம்பூர்ணம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.