அத்திமரத்தை வெட்டியவர் மீது வழக்கு


அத்திமரத்தை வெட்டியவர் மீது வழக்கு
x

அத்திமரத்தை வெட்டியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே நடுமுத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38), அய்யூர்அகரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர்கள் இருவருக்கும் அய்யூர்அகரத்தில் அருகருகே நிலம் உள்ளது. செந்தில்குமாரின் நிலத்தில் இருந்த அத்திமர நிழல், ராஜேந்திரன் நிலத்தில் விழுந்தது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், செந்தில்குமாரின் நிலத்திற்கு அத்துமீறி சென்று அங்கிருந்த அத்திமரத்தை வெட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செந்தில்குமார், விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story