சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு
சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
கடலூர்
சிதம்பரம்,
சிதம்பரம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றாள். அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அந்த சிறுமி 8 மாத கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுமியை, மணிவண்ணன் என்பவர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததோடு, பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் மணிவண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story