தம்பதியை தாக்கியவர்கள் மீது வழக்கு


தம்பதியை தாக்கியவர்கள் மீது வழக்கு
x

தம்பதியை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவமங்கலம் காந்திநகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). அதே பகுதியில் வசித்து வருபவர் புகழேந்தி. இவர்கள் 2 பேருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று செல்வராஜின் மனைவி உமா மற்றும் புகழேந்தியின் மனைவி லலிதா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த லலிதா, அவரது கணவர் புகழேந்தி ஆகியோர் உமா மற்றும் செல்வராஜை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த உமா தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story