பார்சலை கொடுக்காமல் ஏமாற்றிய டிராவல்ஸ் ஊழியர்கள் மீது வழக்கு


பார்சலை கொடுக்காமல் ஏமாற்றிய டிராவல்ஸ் ஊழியர்கள் மீது வழக்கு
x

பார்சலை கொடுக்காமல் ஏமாற்றிய டிராவல்ஸ் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி மலைக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.3 லட்சம் மதிப்பிலான பார்சலை மும்பையில் உள்ள எஸ்.ஆர்.எஸ். டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் திருச்சியில் உள்ள டிராவல்ஸ் கிளைக்கு அனுப்பி உள்ளார். ஆனால், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள அந்த கிளையின் மேலாளர் குமார் (வயது 60), டிரைவர்கள் வெங்கடேசன்(50), தீர்த்தகிரி(50) ஆகியோர் அந்த பார்சலை முருகேசனிடம் ஒப்படைக்காமல் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின்பேரில், டிராவல்ஸ் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் டிரைவர்கள் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story