சாத்தூர் அருகே மனைவியை தாக்கியவர் மீது வழக்கு


சாத்தூர் அருகே மனைவியை தாக்கியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Sept 2023 2:13 AM IST (Updated: 8 Sept 2023 2:40 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே மனைவியை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சாத்தூர் அருகே உள்ள படந்தால் தென்றல் நகரை சேர்ந்தவர் விமலாதேவி (வயது 27). இவருக்கும் வெம்பக்கோட்டை சங்கர பாண்டியாபுரத்தை சேர்ந்த சுரேஷ்கண்ணன் என்பவருக்கும் கடந்த 2022-ல் சாத்தூர் பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது. சுரேஷ்கண்ணன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறை முடிந்து பணிக்கு செல்லும் போது மனைவி விமலாதேவியை அழைத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சுரேஷ் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் விமலாதேவியை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுப்படி விமலா தேவியின் புகார் குறித்து சுரேஷ்கண்ணன் மீது சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story