கணவர் மீது சுடு தண்ணீரை ஊற்றிய மனைவி மீது வழக்கு


கணவர் மீது சுடு தண்ணீரை ஊற்றிய மனைவி மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Jun 2023 12:34 AM IST (Updated: 27 Jun 2023 2:09 PM IST)
t-max-icont-min-icon

நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்ததால் கணவர் மீது சுடுதண்ணீரை ஊற்றிய மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருச்சி

நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்ததால் கணவர் மீது சுடுதண்ணீரை ஊற்றிய மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

டிரைவர்

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பழங்காவேரி பாரதிநகரை சேர்ந்தவர் பாலு என்ற மகாமுனி (வயது 55). டிரைவரான இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வலிப்பு நோய் ஏற்பட்டு ஒருபக்க கையும், காலும் செயல் இழந்தது.

இதனால் அவரால் வேலை செய்ய முடியவில்லை. இதைத்தொடர்ந்து மகாமுனியின் மனைவி உஷா (37) கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார்.

சுடுதண்ணீர் ஊற்றினார்

இந்த நிலையில் உஷாவின் நடத்தையில் மகாமுனி சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டில் மகாமுனி தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது, சுடுதண்ணீரை எடுத்து வந்த உஷா கணவர் மீது ஊற்றினார். இதனால் வேதனையால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story