மனைவியை தாக்கிய தொழிலாளி மீது வழக்கு
மனைவியை தாக்கிய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி
தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்தவர் வசந்தகுமார். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கல்பனாதேவி (வயது 29). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக கணவன், மனைவி கடந்த 2 ஆண்டாக பிரிந்து வாழ்கின்றனர். பூதிப்புரம் கல்லறை தோட்டம் அருகில் கல்பனாதேவி சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது அவரை வழிமறித்து வசந்தகுமார் தகராறு செய்தார். அப்போது அவர் தனது மனைவியை தாக்கி முள்வேலியில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்பனாதேவி கொடுத்த புகாரின் பேரில் வசந்தகுமார் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story