வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள துடையூர் மேல்பத்து பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி நதியா (வயது 33). இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நதியா ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தன்னிடம் வரதட்சணை கேட்டு கணவர் பாலாஜி, மாமியார் லட்சுமி அம்மாள் (70) மற்றும் சசி என்ற மருதமுத்து, ரேவதி ஆகியோர் கொடுமைப்படுத்துகின்றனர். மேலும் தகாதவார்த்தையால் திட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story