பெண் அதிகாரியை திட்டிய செங்கல் சூளை உரிமையாளர் மீது வழக்கு
சோதனை நடத்தச்சென்ற பெண் அதிகாரியை திட்டிய செங்கல் சூளை உரிமையாளர் மீது வழக்கு
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் பர்வதம் தலைமையிலான அதிகாரிகள், விழுப்புரம் அருகே பிள்ளையார் குப்பத்தில் இருக்கும் தொடர்ந்தனூரை சேர்ந்த ஏழுமலை (வயது 40) என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் திடீர் சோதனை நடத்தச்சென்றனர். அப்போது துணை இயக்குனர் பர்வதத்தை, ஏழுமலை அரசுப்பணியை செய்யவிடாமல் தடுத்து திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பர்வதம், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ஏழுமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story