பெண்ணை தாக்கியதாக தம்பதி-மகன் மீது வழக்கு
பெண்ணை தாக்கியதாக தம்பதி-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள பருக்கல் கிராமத்தை சேர்ந்தவர் பவுனம்மாள்(வயது 45). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவருக்கும் இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கண்ணன், அவரது மனைவி செந்தமிழ்செல்வி, மகன் கதிரவன் ஆகியோர் சேர்ந்து பவுனம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் 3 ேபர் மீது உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story