கல்லூரி மாணவியை தாக்கிய தந்தை மீது வழக்கு


கல்லூரி மாணவியை தாக்கிய தந்தை மீது வழக்கு
x

கல்லூரி மாணவியை தாக்கிய தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

திருச்சி கொட்டப்பட்டு ஜே.ஜே.நகர் பகுதியில் வசித்து வருபவர் சகாய சேவியர்(வயது 62). இவரது மகள் சகாய ஜாஸ்மின் ரோஸ்(20). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 10 மணி அளவில் சகாய ஜாஸ்மின் ரோஸ் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது சகாய சேவியர், சகாய ஜாஸ்மின் ரோஸிடம் இவ்வளவு தாமதமாக வருகிறாயே என்று கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாய்த்தகராறில் தனது மகள் ஜாஸ்மின் ரோஸை சகாய சேவியர் கைகளால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சகாய ஜாஸ்மின் ரோஸ் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சகாய ஜாஸ்மின் ரோஸ் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் சகாய சேவியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story