விவசாயியை தாக்கிய தாய்-மகன் மீது வழக்கு


விவசாயியை தாக்கிய தாய்-மகன் மீது வழக்கு
x

விவசாயியை தாக்கிய தாய்-மகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள தெற்கு மணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 40). விவசாயி. இவருக்கு, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மனைவி சிவகாமி தங்களது மகளை திருமணம் செய்து தருவதாக கூறியுள்ளனர். மேலும் அவர் ரஞ்சித்குமாரிடமிருந்து ரூ.2 லட்சம், 1½பவுன் நகையும் பெற்றுள்ளனர். ஆனால் தனது மகளை வேறு ஒருவருக்கு மணமுடித்து வைத்துள்ளனர். இந்தநிலையில் தான் கொடுத்த பணம்-நகையை தன்னிடம் தருமாறு சிவகாமியிடம், ரஞ்சித்குமார் கேட்டுள்ளார். அப்போது சிவகாமியும் அவரது மகன் தினேஷ்குமாரும், ரஞ்சித்குமாரை திட்டி தாக்கியுள்ளனர். இது தொடர்பாக ரஞ்சித்குமார் கொடுத்த புகாரின் பேரில் சிவகாமி மற்றும் தினேஷ்குமார் ஆகிய 2 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story