வாலிபரை அரிவாளால் வெட்டிய தம்பதி மீது வழக்குப்பதிவு


வாலிபரை அரிவாளால் வெட்டிய தம்பதி மீது வழக்குப்பதிவு
x

வாலிபரை அரிவாளால் வெட்டிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர்

தோகைமலை,

அரிவாள் வெட்டு

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கல்லடை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 41). அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று செல்வத்தின் அக்கா வெள்ளையம்மாள் வீட்டில் இருந்துள்ளார்.அப்போது மணிகண்டன் அவரது மனைவி ரேகா ஆகியோர் வீட்டிற்கு வந்து வெள்ளையம்மாளிடம் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளனர். இதைக்கண்ட செல்வம் அங்கு ஓடி வந்து அதனை தடுக்க முயன்றார். அப்போது அவரது வலது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது.

தம்பதி மீது வழக்கு

இதையடுத்து மணிகண்டன்-ரேகா அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த செல்வத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தோகைமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செல்வம் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் தம்பதிகளான மணிகண்டன், ரேகா மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story