கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசு வேலை கோரி வழக்கு


கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசு வேலை கோரி வழக்கு
x

கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசு தரப்பு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசு தரப்பு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பெண் கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்த சரஸ்வதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என்னுடைய சகோதரி லட்சுமி, கடந்த 2007-ம் ஆண்டில் சிலரால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்து கடந்த 2015-ம் ஆண்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் மனு தாக்கல் செய்தோம். அதை விசாரித்த ஐகோர்ட்டு, கீழ்கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது.

அரசு வேலை

மேலும் இந்த வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்பட்டது. என்னுடைய சகோதரி லட்சுமியின் மகன் மணிகண்டன், போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் வாடுகிறார். மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான அவருக்கு, எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின்படி மாதாந்திர உதவித்தொகையும் முறையாக வழங்கப்படவில்லை. அவருக்கு அரசு வேலையும், மாதாந்திர உதவித்தொகையும் அளிப்பதற்கு கலெக்டர் பரிந்துரைத்தார்.

ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எனது மனுவும் நிராகரிக்கப்பட்டது. எனவே உதவித்தொகையின் நிலுவைத்தொகையையும், அரசு வேலையையும் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்


Related Tags :
Next Story