இந்திர விழா நடத்தக்கோரி வழக்கு


இந்திர விழா நடத்தக்கோரி வழக்கு
x

தஞ்சை பெருவுடையார் கோவிலில் இந்திர விழா நடத்தக்கோரி மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

மதுரை

ராமநாதபுரம் மாவட்டம் கூரியூரைச் சேர்ந்த அழகர்சாமி பாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தஞ்சை பெருவுடையார் கோவில் பிரகாரத்தில் 11-ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்திரன் சன்னதி அமைந்துள்ளது.

ஆனால், பொதுமக்களின் வழிபாட்டிற்கு இதுவரை திறக்கவில்லை. சங்க காலம் முதல் இந்தக் கோவிலில் இந்திரன் வழிபாடு முறை உள்ளது. ஆனால், தற்போது வழிபாடும், பூஜைகளும் நடக்கவில்லை. இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையை மீறும் செயலாகும். எனவே கோர்ட்டு தலையிட்டு பெருவுடையார் கோவிலில் அமைந்துள்ள இந்திரன் கோவிலை மக்கள் வழிபாட்டிற்கு திறந்துவிடுமாறும், சங்க காலத்தில் கொண்டாடப்பட்ட இந்திரவிழாவை நடத்துமாறும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இதேபோன்றதொரு மற்றொரு வழக்குடன் சேர்த்து பட்டியிலிடும்படி உத்தரவிட்டு விசாரணையை வருகிற 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Related Tags :
Next Story