அரசுக்கு சொந்தமான கட்டிடங்களின் தரத்தை ஆய்வு செய்யக்கோரி வழக்கு


அரசுக்கு சொந்தமான கட்டிடங்களின் தரத்தை ஆய்வு செய்யக்கோரி வழக்கு
x

அரசுக்கு சொந்தமான கட்டிடங்களின் தரத்தை ஆய்வு செய்யக்கோரி வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவு.

மதுரை,

மதுரை ஐகோர்ட்டில் ராஜு என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரி கட்டிடங்கள் உள்பட அனைத்து அரசு கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு அரசு கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் பல்வேறு விபத்துகள் நடக்கின்றன. எனவே விபத்துகளை தவிர்க்கும் வகையில் அரசு கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தமிழக அரசு பரிசீலித்து சட்டத்திற்கு உட்பட்டு 8 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story