மீண்டும் மிரட்டும் கொரோனா - "ஏப்ரல் 10ம் தேதி முதல்..." ஐகோர்ட் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பு
சென்னை ஐகோர்ட்டு வழக்கு விசாரணை காணொலி காட்சி வாயிலாகவும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், வழக்கு விசாரணை காணொலி காட்சி வாயிலாகவும் நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை, நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை ஏப்ரல் 10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், இந்த வசதியை வழக்கறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story