பழமையான கட்டிடத்தில் செயல்படும் தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தை காலி செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு


பழமையான கட்டிடத்தில் செயல்படும் தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தை காலி செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு
x

பழமையான கட்டிடத்தில் செயல்படும் தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தை காலி செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மதுரை


மதுரையை சேர்ந்த சிதம்பரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை நகரத்தார் சங்கத்துக்கு சொந்தமான இடம் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ளது. அந்த இடத்தில் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தி தெப்பக்குளம் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தின் உறுதித் தன்மையை என்ஜினீயர்கள் மூலம் பரிசோதித்ததில், அது 115 ஆண்டு பழமையானது. பயன்பாட்டிற்கு தகுதியற்றது என தெரிவிக்கப்பட்டது.

அந்த கட்டிடம் பழமையானதாகிவிட்டது என்பதால் போலீஸ் நிலையத்தை காலி செய்யுமாறு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து பல முறை மனு அளித்து உள்ளோம். ஆனாலும் இதுவரை அவர்கள் காலி செய்யவில்லை. தெப்பக்குளம் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தால் விபத்து ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும். அந்த கட்டிடத்தில் இருந்து உடனடியாக தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தை காலி செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் திலக்குமார் ஆஜராகி, தெப்பக்குளம் போலீஸ் நிலையத்துக்கு வேறு கட்டிடத்துக்கு மாற்றுவதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு மனுதாரர் வக்கீல் ஆஜராகி, கட்டிடத்தில் விபத்து ஏற்பட்டால் மனுதாரர் தரப்பினர் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்தார்.

விசாரணை முடிவில், அந்த கட்டிடத்தில் இடர்பாடுகள் ஏற்பட்டால் காவல்துறை பொறுப்பேற்பதாக மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணை ஒத்திவைத்தனர்.


Related Tags :
Next Story