சீன அதிபருக்கு எதிராக போராடியதாக வழக்கு - திபெத் மாணவர்கள் மீதான வழக்குகள் ஐகோர்ட்டில் ரத்து


சீன அதிபருக்கு எதிராக போராடியதாக வழக்கு - திபெத் மாணவர்கள் மீதான வழக்குகள் ஐகோர்ட்டில் ரத்து
x

சீன அதிபர் வருகைக்கு எதிராக போராடியதாக திபெத் மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஐகோர்ட் ரத்து செய்தது.

சென்னை,

சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகத்திற்கு வருகை தந்த போது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக திபெத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.

அப்போது மாணவர்கள் தரப்பில், தடையை மீறி எந்த போராட்டமும் நடத்தவில்லை எனவும், போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததாகவும் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மஞ்சுளா, மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.


Next Story